Inmo – NLP எனும் தரமான சம்பவம்
சந்திப்பு இந்த ஒரு வார்த்தைக்கு எல்லோருடைய வாழ்க்கையிலும் முக்கியமான தவிர்க்க முடியாத பங்குண்டு. உலகின் பெரும் சாதனை இந்த சந்திப்பு என்ற வார்த்தையினால் நிகழ்திருக்கின்றன என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை அது தான். புரூஸ்லி ஐபி மேனை சந்தித்திருக்காவிட்டால், காரல்மார்க்ஸ் ஜன்னியை சந்தித்திருக்காவிட்டால், இசை கலைஞன் யானி லிண்டாவை சந்தித்திருக்காவிட்டால் இப்படி சொல்லி கொண்டே போகலாம். ஒரு உண்மையான சந்திப்பின் வழி நடக்கும் சம்பவங்கள் தான் எல்லோருடைய வாழ்விலும் திருப்புமுனை. அப்படி ஒரு முக்கியமான சந்திப்பு என் வாழ்விலும் நடந்தது.